0 0
Read Time:2 Minute, 54 Second

தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்டவாரியாக செயல்படுத்தப்படும் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவது உண்டு.

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரிகள் பட்டியல்படி. அரியலூர் மாவட்டத்துக்கு ரமேஷ் சந்த் மீனா, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி -சி.சமயமூர்த்தி, கோயம்புத்தூர் – என்.முருகானந்தம், கடலூர் – சந்திரகாந்த் பி.காம்ப்ளே, தருமபுரி- அதுல் ஆனந்த், திண்டுக்கல் – மங்கத் ராம் சர்மா, ஈரோடு மற்றும் திருப்பூர் – கே.கோபால், காஞ்சிபுரம் – எல்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கன்னியாகுமரி – பி.ஜோதிநிர்மலா சாமி, கரூர் – சி.விஜயராஜ்குமார், கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ், மதுரை, விருதுநகர் – பி.சந்திரமோகன், நாகை, மயிலாடுதுறை – எம்.சாய்குமார், நாமக்கல் – தயானந்த் கட்டாரியா, நீலகிரி – சுப்ரியா சாஹூ, பெரம்பலூர் – அனில் மேஷ்ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், புதுக்கோட்டை – ஷம்பு கல்லோலிகர், ராமநாதபுரம் – தர்மேந்திர பிரதாப் யாதவ்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை – ஜி.லட்சுமி பிரியா, சேலம் – முகமது நசிமுதீன், சிவகங்கை – டி.கார்த்திகேயன், தென்காசி – எஸ்.ஜே.சிரு, தஞ்சாவூர் – மைதிலிகே.ராஜேந்திரன், தேனி – ஏ.கார்த்திக், தூத்துக்குடி – குமார் ஜெயந்த், திருச்சிராப்பள்ளி – ரீட்டா ஹரீஷ் தாக்கர், திருநெல்வேலி – அபூர்வா, திருப்பத்தூர் – டி.எஸ்.ஜவகர், வேலூர் – எஸ்.ஸ்வர்ணா, திருவள்ளூர் – கே.பாஸ்கரன் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்கு ஆர்.கிர்லோஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %