Read Time:3 Minute, 26 Second
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
- – அரசு அலுவலகங்கள் 30% ஊழியர்களுடன் செயல்படலாம்.
- – 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
- – 50 % சதவீத பத்திரப்பதிவுக்கு தமிழக அரசு அனுமதிக்கப்படும்.
- – ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
- – மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- – காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி
- – மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்!
- – தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு.
- – ஜூன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.
- – கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
- – தொற்று அதிகரிக்கும் 11 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
- – காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அனுமதிக்கப்படும்.
- – மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- – தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
FULL PDF: