இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையில்,
“முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி கடந்த 3ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6 புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதில் முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமான திட்டம் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது. சென்னை-கிண்டியில்
500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் அமைத்தால் டெல்டா மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் அது மதுரையில் அமைய உள்ளது.
ஆகவே, சென்னையில் உருவாக்கப்பட உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை மாற்றியோ அல்லது வேறொரு மருத்துவமனையையோ தஞ்சை அல்லது திருச்சியில் கொண்டுவர வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழக அரசு பொதுமக்களின் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கவேண்டும். திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக அழுத்தம் தர வேண்டுமென இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது”.
என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளார்.