Read Time:58 Second
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர். காரைக்காலில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் 1 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், காரைக்காலில் உள்ள மதுக்கடை ஒன்றை திறக்கும்போது அங்கு காத்திருந்த இளைஞர்கள், கடை திறப்பை சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்தும், கைத்தட்டியும் வரவேற்றனர். மேலும், கள்ளச்சந்தையில் வாங்கிய மதுவை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, கடைதிறப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அந்த இளைஞர்கள் கூறினர்.