0 0
Read Time:2 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாட்டில் ரவிச்சந்திரன்- உமாமங்கை தம்பதியினர் 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையின் எதிர்ப்புறம் மூலிகை கஞ்சி வழங்கி வந்தனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனை அனுமதியுடன் மருத்துவமனையின் வளாகத்தில் 150 லிட்டர் மூலிகை கஞ்சி மற்றும் 100 லிட்டர் வெண்ணீர் தினந்தோறும் காலை 7 மணி அளவில் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரம் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் காலை, மாலை, இரவு, உணவு வழங்கி வருகின்றனர்.

திருவடி அறக்கட்டளை சார்பில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் எனக் கூறும் ரவிச்சந்திரன் இவர் ஒரு அரசு ஊழியர். நாகை மாவட்ட சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் மாவட்ட சுகாதார துறை கண்காணிப்பாளராக உள்ளார்.இவரது மனைவி உமா மங்கை இவரும் ஓர் அரசு ஊழியர் திருவெண்காடு அரசுப் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் காசிபர், சவேநாதன் உள்ளனர்.

ரவிச்சந்திரன், உமாமங்கை, காசிபர் ஆகிய மூவரின் மாத ஊதியத்தில் இருந்து அன்னதானம் மற்றும் மூலிகை கஞ்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யாரிடமும் நன்கொடையாக கேட்டதில்லை தாமாக முன்வந்து கொடுக்கும் நண்பர்களிடம் பெற்று கூடுதலாக உணவு தயாரித்து வழங்கிவருகின்றன.

நன்றி: மயிலைகுரு

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %