கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டது.
மண்டல துணை ஆளுநர் முஹம்மது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளரும், மண்டல செயலாளருமான மஹபூப் உசேன் முன்னிலையில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், முதுநிலை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் பாஸ்கரிடம் வழங்கினார். நிகழ்வில் சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவர் என். என். பாபு, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பேரா. சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தேர்வுதலைவர் ஜி. சீனுவாசன், சத்திய சாயி சேவா சங்க சந்திரசேகர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் நமக்கு கிடைக்க உறுதுணையாக இருந்த நம் மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு, இந்திய ரோட்டரி கோவிட்-19பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் PDG ஒளிவண்ணன், PDG கோபாலகிருஷ்ணன்
வெளிநாட்டு இந்தியர்களின் ஆக்ட் கிராண்ட்ஸ் அமைப்பு, மெட்ராஸ் வடக்கு ரோட்டரி சங்கம், பெங்களுரு யுனைடட் வே, ஸ்வாஸத் அமைப்பு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.