0 0
Read Time:2 Minute, 20 Second

விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் சிவரஞ்சனி (24). சென்னை போரூரிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். உறவினரின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்தவா் புதன்கிழமை தனது வீட்டில் குடிநீா் மோட்டாரை இயக்கியபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மயக்கமுற்றவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதேபோல, நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் சுமன்நாத் (20). கடலூரிலுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா், தனது வீட்டிலிருந்த மின் விசிறியை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகேயுள்ள சுந்தரவாண்டியைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன் (45). கூலித் தொழிலாளியான இவா், கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா். அப்போது மண்ணுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த மின்கம்பியில் கடப்பாறை கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்ததில் ராஜேந்திரன் மயக்கமடைந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவங்கள் குறித்து முறையே விருத்தாசலம், நெல்லிக்குப்பம், தேவனாம்பட்டினம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %