0
0
Read Time:1 Minute, 21 Second
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைத்துப் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கணக்கெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தரவுகளைப் பெற்றுக் கணக்கெடுக்கவும், குழந்தைகள் நல ஆணையத்தின் முன் அந்தக் குழந்தைகளை ஆஜர்படுத்தவும் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.அந்தக் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தால் கல்வி உரிமைச் சட்டத்தில் அதே பள்ளியில் படிக்க வழிவகை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் அரசு ஊழியர்களாகவோ, பொதுத்துறை நிறுவன ஊழியர்களாகவோ இருந்தால் அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.