சீர்காழி கோவிந்தராஜனாருக்கு மணி மண்டபம் கட்டப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!
சீர்காழி மூவரைப் பற்றிப் பேசும் போது சீர்காழி கோவிந்தராஜனாரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சீர்காழி மூவரின் தமிழிசைப் பாடல்களை மேடையில் பாடி உலக மக்கள் செவிகளில் தமிழும், சீர்காழியும் ஒலிக்கச் செய்தவர் இசைமேதை சீர்காழி கோவிந்தராஜன்.
சீர்காழி கோவிந்தராஜன் சுமார் 16 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் இசைக் கல்லூரியில் 1949-ல் இசைமணி விருதுகள், 1951-ல் சென்னை கர்நாடக இசை கல்லூரியில் சங்கீத வித்வான் விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
2004-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இன்றுவரை சீர்காழி கோவிந்தராஜனாருக்கு மணி மண்டபம் கட்டப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
-மருத்துவர் ராமதாஸ்