யூடியூபர் மதனை நேரில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி காவல்துறை உத்தரவு!.
Madan PUBG Youtube மதன் யூடியூப் சேனல் மீது விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல உரிமை ஆணையம்!.
ஆன்லைன் விளையாட்டில் வரும் மதன் சர்வசாதாரணமாக கெட்டவார்த்தைகளை பேசுவதும் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவதும் பப்ஜி விளையாடும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றததால் தான் விரைவாகவே மதன் யூடியூப் சேனலுக்கு வருவாய் அதிகரித்ததாக கூறப்படுகின்றது.

இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன் அவர்களை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வர சொல்லி இரவில் ஆடையின்றி வீடியோ சாட் செய்ய அழைப்பதாக சில வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றன.
ஆணாக இருந்தால் கெட்டவார்த்தை உபயோகிப்பதும் பெண்ணாக இருந்தால் அந்தரங்கம் பற்றி கேட்டு பேசுவதையும் மதன் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி அவர் மீது பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஜாலியாக பேசி விளையாடினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இவரைப் பின்பற்றி சில சிறுவர்களும் யூடியூப் சேனலை தொடங்க ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மதன் யூடியூப் சேனல் மீது ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவாக பேசுவது தொடர்பாக கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.