0 0
Read Time:5 Minute, 54 Second

நெல்லை: கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு சமூக நலப்பணி!. குவியும் வாழ்த்துக்கள்!

முதல் அலையில் 45,000 உணவு பொட்டலங்கள் இரண்டாவது அலையில் 25,000 உணவு பொட்டலங்கள். இறந்தவர்கள் உடல் நல்லடக்கம் நெல்லை மாநகரில் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் சமூக நலப்பணி!

2020 முதல் அலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல். நிவாரண பொருட்கள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல். இறந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் போன்ற சமூக பணிகளை அறக்கட்டளை மூலம் செய்தோம். உணவு பொட்டலங்கள் முதல் அலையில் 55 நாட்கள் தொடர்ந்து 45000 வழங்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது அலையிலும் பெருந்தொற்றுக்கு எதிராக பல களப்பணி செய்து வருகிறோம். நெல்லை மாநகரை சுற்றி அறக்கட்டளை உறுப்பினர்கள் 22 பேர் உதவியுடன் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை தலைவராக ஜெபசிங், பொது செயலாளராக இராபர்ட் செல்லையா, பொருளாளராக பாலா, நிர்வாக குழு உறுப்பினர்களாக ராஜலிங்கம், கந்தையா ஆகியோர் செயல்பட்டு வருகிறோம்.

நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து வாட்சப் குழு உருவாக்கப்பட்டு உணவு தேவைப்படும் இடங்களில் உணவு வழங்கி வருகிறோம். வாட்சப் குழு மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செயல்படுத்தி வருகிறோம்

மருத்துவமனை உதவிகள்:

நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவி மற்றம் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். பொதுமக்களிடம் இருந்து வரும் உதவி கேட்புகளுக்கு உரிய தகவல்களை தெரிவித்து வருகிறோம்.

வாகன உதவி:

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலதாமதமின்றி 108 ஆம்புலன்ஸ் கிடைப்பதற்கும், கரேனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மயானங்களுக்கு கொண்டு சேர்க்க அரசு இலவச அமரர் ஊர்தியும், SDPI கட்சி ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி நல்லடக்கம் செய்யும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.

செய்திகள்:

கரோனா நோய் பாதிப்பு மக்களுக்கு அறக்கட்டளை மூலம் செய்யும் உதவிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பத்திரிகை குழு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக பணி செய்துகொண்டிருக்கிறது.

வாட்சப் குழு:

பொதுவெளியில் இருந்து வரும் செய்திகளை கரோனா தொற்று பாதிப்பு, நிவாரணம், மற்றும் தேவைகளை உடனுக்குடன் குழுக்களுக்கு பகிர்ந்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதில் வாட்சப் குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

உதவியாளர்களுக்கு உதவி:

கரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு உதவி வரும் உதவியாளர்களுக்கு மதிய உணவினை தொடர்ந்து பாளை தலைமை அரசு மருத்துவமனை , அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு கடந்து 43 தினங்களாக உணவு வழங்கிவருகிறோம்

நிவாரண பொருட்கள்:

மாநகர் பகுதியில் உள்ள ஆதரவற்ற 20 குடும்பத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கியுள்ளோம்

கபசுர குடிநீர்:

நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து தினமும் பாளை, மேலப்பாளையம், உழவர் சந்தை பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுர குடிநீர் நாள் ஒன்றுக்கு 1000 பேர்க்கு விநியோகித்து வழங்கி வந்தோம்.

தடுப்பூசி முகாம்:

கரோனாவை விரட்டும் போராயுதம் தடுப்பூசி செலுத்தி கொள்வதுதான். இதில் நெல்லை மாநகர பகுதி ஒரு சில மக்களிடம் இருந்த தயக்கத்தை தெளிவு படுத்தி தடுப்பூசி பொதுமக்கள் போட்டுக் கொள்ள தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொன்றில் இருந்து அனைத்து பகுதியினரையும் பாதுகாப்பதில் முன் களப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர், மயான ஊழியர்கள். பத்திரிகையாளர்கள் அனைவரோடும் இணைந்து பணியாற்றி பிரதிபலன் பாராமல் மக்கள் நலன் சார்ந்து சமூக பணியாற்றி வரும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், இறைப் பணியாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %