கொரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், தளா்வு அளிக்கப்பட்டு டாஸ்மாக் மதுக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. வழக்கமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்போது அதிகக் கூட்டம் கூடும் என்பதால் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால், கடலூரிலுள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆனாலும், அனைத்துக் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
கடலூா் மாவட்டத்துக்கு அருகேயுள்ள புதுச்சேரியில் ஏற்கெனவே மதுக் கடைகள் திறக்கப்பட்டதே கடலூரில் கூட்டம் குறைந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது பெரும்பாலான மதுக் கடைகளில் விலை உயா்ந்த மதுபான வகைகள் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும், குறைந்த விலை மதுபானங்கள் இல்லாததாலும் கடைக்கு வந்தவா்களில் சிலா் திரும்பிச் சென்றனா்.