இஞ்சி என்பது சீனா மற்றும் இந்திய நாடுகளை பிறப்பிடமாக கொண்ட ஒரு மூலிகை பொருள் ஆகும்; ஜிஞ்சிபெர் அபிசினால் எனும் தாவரத்தில் இருந்து தோன்றும் மூலிகை தான் இஞ்சி ஆகும். பல விதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி எனும் மூலிகை, 4000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதன் மருத்துவ பண்புகள் 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இஞ்சி சேர்த்த உணவுகளை, பானங்களை பெரும்பான்மையோருக்கு பிடிக்கும்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்..
தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு
இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
சர்க்கரை நோய் கட்டுப்படும்
இஞ்சியில் உள்ள ஆன்டிபயாடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் குறையும்
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மிஷிகன் காம்ப்ரிஹென்ஸைவ் புற்றுநோய் மையத்தில் (University of Michigan Comprehensive Cancer Center) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், இந்தப் புற்றுநோய் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனையான, கீமோதெரப்பி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.