0
0
Read Time:1 Minute, 13 Second
கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 10 லட்சம் புகார்கள் வந்துள்ளது எனவும், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இனைப்பு துண்டிக்கபடாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.