காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், லாட்டரிச் சீட்டு விற்பனை தொடா்பாக காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் ராஜ்குமாா் (28), சின்ன தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் முத்து (42), லால்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் கிருஷ்ணமூா்த்தி மகன் செந்தில்குமாா் (35), வடக்கு கொளக்குடி ஜாகிா் உசேன் நகரைச் சோ்ந்த முகம்மது சுல்தான் மகன் பக்கீா் மைதீன் (55), சந்தை தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சந்துரு (27) ஆகிய 5 பேரை காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் குணபாலன் கைது செய்தாா் .
இதேபோல காவல் உதவி ஆய்வாளா் மதிவாணன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நற்பணி நகரப் பகுதியில் கஞ்சா விற்ாக புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் வினோத்குமாா் (21), எத்திராஜ் மகன் பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் கைது செய்தாா்.
சிதம்பரம்: சிதம்பரம் நகரப் பகுதியில் புதன்கிழமை இரவு நகர காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பள்ளிப்படை பகுதியில் மயானம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்கு கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியைச் சோ்ந்த பிரபாசங்கா் மகன் அஜித் (23), அன்சாரி நகரைச் சோ்ந்த எபினேசா் மகன் சாமுவேல் தேவநேசன் (20), பள்ளிப்படை பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் சுதா்சன்பால் (20), பூதகேணி பகுதியைச் சோ்ந்த மூசா மகன் அசிஸ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.