`காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நோய்கள் பலவற்றை நம்மை அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல். இனி, சுக்கின் பலன்களைப் பார்ப்போம்!
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. மூலிகைப் பொருட்களில் “சுக்கு” எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் முதலிடம் பெறுகிறது.
- சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
- சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
- சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
- சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
- சுக்குடன் சிறுது பால் சேர்த்து மைய அரைத்து நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்தில் ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டு வலி முற்றிலும் குணமாகும்.
- இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்தத் தேனோடு சேர்த்துச் சாபிட்டால் தலைவலி சரியாகும்.
- சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். இதற்கு மருந்தாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ‘இஞ்சி ரசாயனம்’ நல்ல மருந்து.
- கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.
- சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து.
இஞ்சி ரசாயனம் செய்முறை:
இஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கவும். அதன் ஈரத்தன்மையைப் போக்க, மின்விசிறிக் காற்றில் உலர்த்தி எடுக்கவும். ஒரு வாணலியில் சிறுதுளி நெய்விட்டு, இஞ்சியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். சீரகத்தையும் துளி நெய்யில் வறுக்கவும். வறுத்த இஞ்சி, சீரகம் இரண்டையும் பொடித்துக்கொள்ளவும். 100 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லத்தில் இந்தப் பொடியைச் சேர்த்துக் கிளறி, ஒரு பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி ரசாயனம் தயார்.