0
0
Read Time:1 Minute, 18 Second
சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் தலைவர் Rev.ராஜேஷ் ஜோ கரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மேடவாக்கம் பகுதி மக்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம், 2000 பேருக்கு உணவு ஆகிய பணிகளை சிறப்பாக செய்தனர்.
மேலும் யாருமே கவனிக்காத வாழ்வாதாரம் இழந்த கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இருளர் சமூக மக்கள் அதிகம் வாழும் இடைகழிநாடு கிராமத்தை தத்து எடுத்து அங்கு வசிக்கும் 60 குடும்பங்களுக்கும் தேவையான அரிசி, மளிகை பொருட்கள் ரூபாய் 60000 மதிப்பில் வழங்கி சேவையாற்றி உள்ளது.
உணவளிப்போம் வா அமைப்பின் நிர்வாகிகள் சாம். G.K.மணி, நிக்சன், பிரின்ஸ் சாலமோன், டேவிட், கவிதா, இவாஞ்சலின், ஜெமிமா, மோசே, சந்தோஷ் ஆகியோர் தன்னலம் கருதாது பணி செய்தமைக்கு இருளர் சமுதாய மக்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்