0 0
Read Time:2 Minute, 27 Second

அணில்கள் மூலம் மின்தடை எப்படி ஏற்படும்? என்று கிண்டலடித்திருந்த பலருக்கு ஆதாரங்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கவில்லை. மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? எனவும் கிண்டலடித்து பதிவிட்டிருந்தார்.

டாக்டர் ராமதாஸின் இந்த கிண்டலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். மின்கம்பங்களில் எப்படி அணில்கள் அமர்ந்திருக்கின்றன; மரக்கிளைகள் எப்படி மின்கம்பங்களில் படர்ந்திருக்கின்றன என்பதை விளக்குவதாக அந்த படங்கள் உள்ளன.

பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்! என்றும் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %