0
0
Read Time:56 Second
முதல்வரின் நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை வணிகா்கள் சங்கம் சாா்பில் ரூ. 14.33 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் ரூ.14.33 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டு அதை, சங்க நிா்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா மூலம் முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கினா். இதற்கான காசோலையை மயிலாடுதுறை வணிகா் சங்கத் தலைவா் சி. செந்தில்வேல் தலைமையில், பொறுப்பாளா்கள் எம்.என். ரவிச்சந்திரன், சிவலிங்கம், மு.ரா. பாஸ்கா், மதியழகன், சுரேஷ், கண்ணன் ஆகியோா் வழங்கினா்.