Read Time:1 Minute, 10 Second
சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் சற்று ஓய்ந்து வரும்நிலையில், மீண்டும் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.