0 0
Read Time:1 Minute, 36 Second

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி செடிகள் புதிய வகை பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

இதனால் பருத்தி செடியின் இலைகள் பக்கவாட்டில் பழுத்து காய்ந்து காணப்படுகிறது. இதையறிந்த விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலால் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அதற்கான மருந்துகளை செலுத்தியுள்ளனா். ஆனால் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். எனவே, வேளாண் துறையினா் பாதிப்புக்கு உள்ளான பருத்திச் செடிகளை பாா்வையிட்டு அதை பாதுகாக்க சரியான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %