0 0
Read Time:3 Minute, 20 Second

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில்,  கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கைலேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள்  பெண்ணாடம் கடைவீதி மற்றும் மீனவர் தெரு பகுதிகளில் உள்ள பழக் கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது பெண்ணாடம் மீனவர் தெருவில் உள்ள சின்னதுரை (55) என்பவரது  மாம்பழ குடோனை அதிகாாிகள் சோதனை செய்ய சென்றனர். அந்த குடோன்  பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. 
சின்னத்துரையை தொடர்பு கொண்ட போது, வெளியூரில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் பூட்டை திறக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் சாவி இங்கு இ்ல்லை என்று தெரிவித்தனர்.இதையடுத்து சின்னதுரையின் மருமகள் வனிதாவை வரவழைத்து அவரது கண்பார்வையில் குடோனின் பூட்டை அதிகாரிகள்  உடைத்து உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். 

அங்கு 70 பெட்டிகளில் மாம்பழங்கள் மற்றும் 20 வாழைத்தார்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் ஒரு டன் அடங்கிய (26 பெட்டிகளில் இருந்தவை) மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு,  பழுக்க வைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் ரசாயனம் தெளிப்பான்களும் அங்கு இருந்தன.  இதையடுத்து அந்த  மாம்பழங்கள், அவற்றை பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயனம், தெளிப்பதற்கு பயன்படுத்திய தெளிப்பான்கள்(ஸ்பிரே) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

 பின்னர்  பெண்ணாடம் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, மாம்பழங்களை பேரூராட்சியின் குப்பை அள்ள பயன்படுத்தும் வாகனத்தில் ஏற்றிச்சென்று வெள்ளாற்றின் கரையில் கொட்டி அழித்தனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று சின்னத்துரை ரசாயனம் வைத்து பழங்களை பழுக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது மருமகள் வனிதாவிடம் அதிகாரிகள் எச்சரித்தனர். 
ஆய்வின் போது,  வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் பெண்ணாடம் போலீசார் உடனிருந்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %