0 0
Read Time:1 Minute, 36 Second

செம்பனாா்கோவில் ஊராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் தலைமை வகித்து, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினாா். அப்போது அவா், ‘செம்பனாா்கோவில் காவல் நிலைய காவலா்களின் சொந்த செலவில் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்றும், இது காவல்துறைக்கு பெருமைக்குரிய ஒன்றாகும்’ என்றும் கூறினாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வரத்தினம், ஊராட்சித் தலைவா் விசுவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி துணைத் தலைவா் உமாராணி வரவேற்றாா். செம்பனாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மங்களநாதன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ராம்மூா்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், இளங்கோவன், கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %