பயணிகள் பயணத்தின் போது கட்டாயம் தங்களிடம் கிருமி நாசினி வைத்திருத்தல் வேண்டும் ,ஒருவர் பயன்படுத்திய இருக்கை அல்லது கைப்பிடிகளை மற்றொருவர் பயன்படுத்த நேர்கையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின் பயன்படுத்த வேண்டும் .ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு இடையே கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும் , கண்டிப்பாக முககவசம் அணிதல் வேண்டும், ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது பயணத்தின்போது முன்பின் தெரியாத அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் உணவு பண்டங்கள், குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்ப்பீர் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பயணிகளிடையே விழிப்புணர்வு பாதுகாப்பான பயணம் விபத்தில்லா பயணம் குறித்து ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் R. அருண்குமார் உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவர் N. N. பாபு தலைமை வகித்தார் மண்டல செயலாளர் E. மெஹபூப் உசைன் ,தேர்வு தலைவர் R.ராஜசேகரன் முன்னிலை வகித்தனர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜூலியட், தனிப் பிரிவு தலைமை காவலர் எஸ் பாஸ்கரன் மற்றும் ரயில்வே காவலர்கள் பங்கேற்றனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.