0 0
Read Time:3 Minute, 42 Second

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 16-ந்தேதி தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பகுதி சாகுபடிக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பல்வேறு தடைகளை தாண்டி கடைமடை பகுதியான நாகை அருகே பாலையூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. கடைமடை விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரம் ஏக்கர் நடவு மூலமும், 10 ஆயிரம் ஏக்கர் நேரடி விதைப்பு மூலமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்ததால் தற்போது டிராக்டர்கள் மூலம் நிலத்தை உழவு செய்யும் பணியில் செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், புலியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தலைஞாயிறு ஒன்றியத்தில் நேரடி நெல்விதைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் விதைகளை முளைக்க வைப்பதற்காக வயல்களில் தண்ணீர் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நாற்று பறித்தல், நடவு பணி உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடைமடை பகுதிக்கு வந்துள்ள தண்ணீர் மூலம் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை டிராக்டர் மூலம் உழுது தயார் படுத்தி வருகின்றனர். தற்போது தண்ணீர் பற்றாக்குறையாக வந்து கொண்டிருப்பதால் முழுமையாக விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. எனவே திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் மேடான பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %