Read Time:1 Minute, 9 Second
திருவாரூரில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் வயலில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் திடிரென்று குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் விவசாய நிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் பயிரிட்ட நிலையில் கச்சா எண்ணெய் வெளியேறி கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.