கடலூர்:தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சார்ந்த பெண்மணி தமிழக அரசு அறிவித்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ காப்பீட்டு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு வரும் அனைவரையுமே அலைக்கழித்து உள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த பெண்மணி தனக்கு மருத்துவ காப்பீடு வேண்டும் என்று மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் அத்தகைய மனுவை அலுவலர்கள் இதுவரையில் தொடர்ந்து 4 நாட்களாக அலைக்கழிக்க வைத்திருக்கிறார்கள் என தெரிகிறது. ஏனென்றால் உங்களில் மனுவில் இதுபோன்ற தவறுகள் உள்ளது உங்களுடைய குடும்ப அட்டையில் வேறு ஒருவரின் பதியப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
மேலும் தினமும் ஒவ்வொரு விதமான காரணங்கள் கூறி வருவதாகவும், அத்தகைய காரணங்களையும் வெளிப்படுத்தி இதுபோன்ற தவறுகள் இல்லை என்று வெளிப்படையான ஆதாரங்களைக் கொண்டு காண்பித்தாலும் அவர்கள் உங்களுடைய கார்டை தவறான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளது என கூறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இதனை கண்டுகொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.