கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கழகப் பொருளாளரும் அண்ணாகிராமம் ஒன்றிய குழுத் தலைவருமான ஜானகிராமன், பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி. முருகன், அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன், தொரப்பாடி பேரூர் கழகச் செயலாளர் கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் கழகச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.