தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இருப்பினும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் – நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயிலை கடந்த 1-ம் தேதி முதல் இயக்கி வருகிறோம். இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட்கள் விநியோகிக்கப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.