0 0
Read Time:3 Minute, 25 Second

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள்யாவும் மூடப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அனைத்து பள்ளிகளிலும், ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவ மாணவிகள் அனைவரும் ஆண்ட்ராய்டு போன் மூலமாக இணைய வழியில் வகுப்பை கவனிக்கின்றனர். இவ்விஷயத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, பெரியளவில் பிரச்னை இல்லை; எல்லோருமே ஒரு மொபைல் வைத்திருக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள்  பெரும்பாலானவர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருப்பதில்லை. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருப்பதால், மொபைல் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.  ஒருவேளை ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தாலும் நெட் வசதி ஏற்படுத்திக்கொள்பவர்கள், மிக மிக குறைவுதான். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான் இருப்பார்கள் அவர்களால் அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொடுக்க முடியாத சூழல் தான் உள்ளது.

இதுபோன்ற சூழலில் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை மகாலட்சுமி என்பவர், நடுவீரப்பட்டு பகுதியை சுற்றியுள்ள பாலூர் – பண்ணை குச்சிப்பாளையம் – சூரியன் பேட்டை – குமளங்குளம் – பல்லவராயநத்தம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

அப்படி கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தும் போது மற்ற பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் அவர் பாடம் நடத்தும் இடத்திற்கு வந்து பாடத்தை கவனித்து தங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்கின்றனர்.

பள்ளிகள் மூடி கிடப்பதால் மாணவர்களின் எண்ணங்கள் சிதறி நம்பிக்கை இழந்து விடக்கூடாது  என்பதற்காக கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார் அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி. இப்படி கிராமம் கிராமமாக நேரில் சென்று பாடம் நடத்துவதால் கிராம மக்கள் பலரும் மகாலட்சுமிக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %