சர்வதேச அளவில், 28 ஆண்டுக்குப் பிறகு, அர்ஜெர்ன்டினா கோப்பை வென்றது. கோபா அமெரிக்க தொடரின் இறுதி போட்டியில், பிரேசிலை வீழ்த்தி அர்ஜெர்ன்டினா வெற்றி.
ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடந்த, இறுதி போட்டியில், உலகத் தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள நெய்மரின் பிரேசில் அணியும், 8 வது இடத்தில் உள்ள மெஸ்சியின் அர்ஜென்டினா அணியும் மோதியது. அர்ஜென்டினா, முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா கோல் கணக்கை சமன் செய்ய நெய்மர் உள்ளிட்ட பிரேசில் வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோபா அமெரிக்க தொடரில் சாம்பியன் ஆனது.
அர்ஜென்டினா, கடைசியாக 1993 ஆம் ஆண்டு கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றிருந்தது. அதன் இன்னர், உலக கோப்பை உட்பட, எந்த ஒரு சர்வதேச தொடர்களிலும் கோப்பையும் வெல்லவில்லை. தற்போது 28 ஆண்டுக்குப் பின் கோபா கோப்பை வென்று, கோபா அமெரிக்க தொடரில் 15 வது முறையாக சாம்பியன் ஆனது அர்ஜென்டினா.