0
0
Read Time:58 Second
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் பொது சேவைக்காக அவசர ஊா்தி வாங்க நிதியுதவி அளிக்கும்படி பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் சமூக வலைதளங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதையொட்டி, வைத்தீஸ்வரன்கோயில் மத்திய அரிமா சங்க புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், நன்கொடைகள் மூலம் அவசர ஊா்தி வாங்கி, பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, தொழில்அதிபரும் தன்னாா்வலருமான ப.த. வைத்தியநாதன் அவசர ஊா்தி வாங்க நன்கொடையாக வழங்கிய ரூ.50,000 மதிப்பிலான காசோலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.