உணவில் மிளகை சேர்ப்பதால் உண்டாகும் பயன்களும், தீமைகளும்!
நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்னெ மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உமையாள் பாட்டி நமக்காக சொல்ல வருகிறாள். முழுமையாகப் படித்து மிளகு தரும் மருத்துவ பயன்களை அறிந்துகொள்ளலாம்!
மிளகை உணவில் தினந்தோறும் பயன்படுத்துவதால் செரிமானத்தை தூண்டுகிறது. மிளகு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் குடலை சுத்தம் செய்கிறது. இரைப்பை நோய்களை தடுக்கிறது.
தோலில் ஏற்படுகின்ற வெண்னமயான வெள்ளை திட்டுகளை மிளகு சரி செய்கிறது. சருமத்தின் அசல் நிறத்தினை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பசியின்மை - தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.
செரியாமை - மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.
ஜலதோஷத்தால் வந்த இருமல் - மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.
உடல் சூட்டினால் வரும் இருமல் - மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 (அ) 3 நாட்கள் எடுக்க தீரும்.
உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க - மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி - இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.
புழுவெட்டுக்கு - மிளகு, வெங்காயம், உப்பு - அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்கும் (புண் ஏற்பட்டால் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பூசிவர புண் ஆறிவிடும்)
மிளகு இரசம் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.
ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் – மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆய்வுகளின் படி கருப்பு மிளகு இரைப்பை சளிக் காயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த ஆய்வில் கருப்பு மிளகுடன் நிர்வகிக்கப்படும் ஒரு பொருள் இரைப்பை இரத்தப்போக்கு அறிகுறிகளைக் காட்டியது. இதன்மூலம் நமது உணவில் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீது அதிக கவனம் தேவை என்று கண்டறியப்பட்டது. இதில் இருக்கும் பைபரின் சாப்பிட்டதற்கு பின் கார சுவையை ஏற்படுத்துவது இதுதான். இது அதிக நன்மைகளை வழங்கும் சேர்மம் ஆகும். ஆனால் இதனை அதிகம் சாப்பிடுவது உங்கள் தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும்.
கருப்பு மிளகு சில மருந்துகளை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.கல்லீரல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடும் ஆண்டிஹிஸ்டமின்கள் ஆகியவை இதில் அடங்கும். பைபரின் மருந்துகள் உறிஞ்சுவதை மேம்படுத்தும் வேலையே செய்கிறது. மருந்து குறைவாக உறிஞ்சப்படும்போது இது நன்மை பயக்கும் என்றாலும் சில மருந்துகளை அதிகமாக உறிஞ்சுவது ஆபத்துக்கு வழிவகுக்கும்.