பிரபல காமெடி நடிகர் வடிவேலு, தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். எளிமையாக, குடும்பத்தில் ஓர் ஆள் மாதிரி பேசினார். முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 5 லட்சம் ரூபாயை அளித்துள்ளேன். உலகமே உற்றுநோக்கும் விதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறார். அவர் அப்படி செயல்படுவது, மெய்சிலிர்க்க வைக் கிறது.
‘உங்களை கெஞ்சி கேட்கிறேன், தடுப்பூசி போடுங்க, ஒத்துழைப்பு கொடுங்க’ என்று கேட்டு ஸ்டாலின் மக்களை தன்வசப்படுத்தினார். . பெண்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள். பொற்காலமான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். சிலர் முகக் கவசம் அணியாமல் இருக்கிறார்கள். நான் 2 தடுப்பூசிப் போட்டுள்ளேன். நாற்பது ஊசி போடச் சொன்னாலும் போடுவேன்.
இவ்வாறு வடிவேலு கூறினார்.அவரிடம், அதிக படங்களில் மீண்டும் உங்களை பார்க்கலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’நல்லதே நடக்கும்’ என்றார்.