மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை பயன் படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலினுள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்த பெண்ணை அங்கிருந்து மீனவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மீனவர்கள் கடலிலிருந்து கரைக்கு வந்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.