0 0
Read Time:3 Minute, 54 Second

ஜூஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானது சாத்துக்குடி ஜூஸ் எனலாம். ஏனெனில் இது எந்த பிரச்சனை இருந்தாலும் குடிக்க ஏற்ற ஓர் அற்புதமான ஜூஸ். 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரும் குடிக்க ஏற்றதும் கூட. சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

காலையில் எழுந்ததும் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அது அடிநா சதையில் உள்ள அழற்சியை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அடிநா சதை அழற்சியானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படக்கூடியவை. சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, இந்த அழற்சியை எதிர்த்துப் போராடி, உடலை நோய்த்தொற்றுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

சாத்துகுடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் பல், ஈறுகளில் போன்ற பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.

சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.

சாத்துகுடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது. சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால் இறப்பை சம்மந்தப்பட்ட நோய்களான அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்ஸர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.

சாத்துக்குடி ஜூஸ் வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலையாக வைத்து செரிமான பிரச்சனையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது, அதோடு வாய்வு பிரச்சனையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது இந்த சாத்துக்குடி ஜூஸ்.

உடல் எடை அதிகமாய் காணப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜுஸை குடித்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்து காணப்படும்.

ஆரோக்கியமான சருமம் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் சரும திசுக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும் இது முகத்தில் அடிக்கடி வரும் பிம்பிளை நீக்குவதோடு, முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டிவிட்டு, சருமத்தை எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ளும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %