0
0
Read Time:1 Minute, 9 Second
பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார்பெட்டி வைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘‘பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், சமூகநலத் துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வாரம்தோறும் ஆய்வு செய்து, புகாரில் முகாந்திரம் இருந்தால், காவல் துறை நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.