மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி கிராம மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் 3 நாளாக சந்திர பாடியில் மீனவ கிராம மக்கள் ஆதார் அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக ஐந்து கிலோமீட்டர் தூரம் எடுத்து வந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் படி தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 21 வகை யான வலைகளை தடை செய்யாமல் சுருக்குமடி வலையை மட்டும் தடை செய்துள்ளதாகவும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மற்ற மீனவர்களுக்கு அரசு அனுமதித்து வருவதாகவும் எனவேசுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் இரண்டு நாட்களாக உண்ணா விருத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக சந்தரபாடியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை ஐந்து கிலோமீட்டர் 1000-க்கும் மேற்பட்டோர் நடை பயண பேரணியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆதார் அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தரையில் அமர்ந்து அவர்கள் எடுத்துவந்த ஆதார் கார்டுகள் மற்றும் குடும்ப அட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் கூறும்போது எங்களுக்கு வாழவே வழியில்லாத போது எங்களுக்கு ஏன் இந்த ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை என்று கூறினர். மேலும் அரசு எங்களது கோரிக்கைகளான சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் எங்களது ஆதார் அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகளை திரும்ப பெறவேண்டும் என்று காவல்துறையினரிடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் ஆதார் அட்டைகள் 2500 மற்றும் குடும்ப அட்டைகள் 650 ஒப்படைத்தனர்.
மேலும் அவர்கள் வழங்கும் போது எங்களது குடும்ப நிலையின் காரணமாக குடியுரிமையை உங்களிடம் ஒப்படைத்து உள்ளம் எங்கள் வாழ்வாதாரம் உங்களிடத்தில் என்று கூறினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.