மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக குறுவை தொகுப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஸ், டி.ஏ.பி உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணமாக அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி பேசினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பால அருள்செல்வன், எம்.எம். சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், கூட்டுறவு வங்கி செயலாளர் நாகராஜ், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், செம்பை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், காவிரி டெல்டா பாசனதாரர்கள் சங்க தலைவர் கோபி கணேசன், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகுணா கண்ணன், திருவிடைக்கழி ராஜா, காட்டேரி சாமிநாதன், எரவாஞ்சேரி பகவதி, மற்றும் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.