மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 ல் உள்ள விதிகாளை அமல்படுத்த கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவரைத் தொடர்ந்து திங்கள்கிழமை குடியுரிமை அடையாளங்களை அரசிடம் ஒப்படைத்தனர், இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது அதே நேரம் 1983 ஆம் ஆண்டு மீன்பிடி சட்டம் முழுமையாக அமல்படுத்தபடும் எனவும் தெரிவித்து. விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததார்.
அதனடிப்படையில் இன்று தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்ன மேடு மீனவர் கிராமத்தில் கடல்சார் அமலாக்க பிரிவு ஆய்வாளர் செல்வி வெர்ஜினியா, மீன்வளத் துறையினர் படகுகள், படகு இஞ்சின் திறன் மற்றும் வலைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.