மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கடையூரில் அரசு விதைப் பண்ணையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் உழவு இயந்திரம் மற்றும் உழவு கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செம்பனார்கோவில் வட்டாரத்தில் கூட்டு பண்ணை திட்டம் 2020- 21 உழவர் உற்பத்தியாளர் குழு கீழபெரும்பள்ளம், அரசூர், அன்னவாசல் உள்ளிட்ட ஊராட்சியில் உள்ள கிராம விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை வகித்தார்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கீழப்பெரும்பள்ளம் விவசாயிகளுக்கு 3 உழவு இயந்திரம் ரூபாய் 5,69,378 மதிப்பீடும், அரசூர் 3 உழவு இயந்திரம் ரூபாய் 5,58,718 மதிப்பீட்டிலும், அன்னவாசல் விவசாயிகளுக்கு இரண்டு உழவு இயந்திரம் மற்றும் சுழல் கலப்பை 1 ரூபாய் 5,13,471 மதிப்பீட்டிலும் மொத்தம் 9 பண்ணைக் கருவிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் வழங்கி உரையாற்றி பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் திருக்கடையூர் விதைப் பண்ணை வேளாண்மை அலுவலர் குமரன், துணை வேளாண்மை அலுவலர் உமாபசுபதி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் துளசிரேகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலினி சிவராஜ், சாமிநாதன், ராஜா, ரங்கராஜன், ராஜலிங்கம் மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.