கொரோனா பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஹிமாச்சலப் பிரதேசத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளதாவது, “குஜராத்தில், நேற்று புதிதாக 36 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 370 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா அரவல் குறைந்துள்ளதால், 9 ஆம் வகுப்பு முதல் +1 வரையிலான மாணவர்களுக்கு, வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். 50% மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள், தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்”, என தெரிவித்துள்ளது.