தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாட ஆண்டுதோறும் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் அணியில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சில்வர் ஜூப்ளி பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகின்ற மாணவி தன்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாணவிகளில் ஆறாவது இடத்தில் தேர்வாகியுள்ளார். இந்த தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 450 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் மயிலாடுதுறையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு பெற்றுள்ளார். தேர்வாகியுள்ள மாணவிக்கு பள்ளியின் நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்றுநர் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து மாணவி தன்யா கூறுகையில் கிரிக்கெட் விளையாட்டில் சிறுவயதிலிருந்து ஆர்வம் அவரது தந்தை அளித்த ஊக்கம், உற்சாகம், உத்வேகம் மற்றும் கிரிக்கெட் பயிற்றுநர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலமாகவும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு ஆண்டிற்கான இந்தியாவின் கிரிக்கெட் மகளிர் அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. அந்த வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் மகளிர் அணியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு எனக்காக உறுதுணையாக அனைத்து பெரியோர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.