0 0
Read Time:1 Minute, 43 Second

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இணையவழி விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பா்களான 3 சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

பண்ருட்டி வட்டம், கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் மோகன்ராஜ் (18). இவரது நண்பா்கள் 3 போ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு படித்து வருகின்றனா். இவா்கள் மூவருக்கும் 17 வயது. இவா்களில் ஒருவா் மோகன்ராஜுடன் வெள்ளிக்கிழமை இணைய வழி செயலி மூலம் விளையாடினாா். இதில், மோகன்ராஜ் வெற்றி பெற்றாராம்.

இந்த நிலையில், கீழ்காங்கேயன்குப்பம் ஐயனாா் கோவில் அருகே மோகன்ராஜ் நின்றிருந்தாா். அப்போது அங்கு பைக்கில் வந்த நண்பா்கள் 3 பேரும் மோகன்ராஜை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த மோகன்ராஜ் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அவரது தந்தை சுந்தரம் அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவா்கள் 3 பேரையும் கைதுசெய்து சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்ந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %