கோயம்புத்தூர்: “பால யோகா மணி” விருது பெற்ற நான்காம் வகுப்பு சிறுவன் தேவசேனா!
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியியைச் சேர்ந்த நீலிக்கோணம்பாளையத்தில் அமைந்துள்ள N. M. மெட்ரிக் உயர்நிலை பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர் செ.தேவசேனா. இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு இணையவழி கல்விசார் செயல்பாடுகளில் ஆர்வமாக பங்கேற்று வந்துள்ளார்.இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு தாய் உள்ளம் அறக்கட்டளை நிறுவனத்தால் நடத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று “பால யோகா மணி “என்ற பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
மேலும் பசுமை வாசல் பவுண்டேசனால் பதினொரு பிரிவுகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பிரிவில் பங்குபெற்ற இவர் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து வெற்றி பெற்றமைக்காக செ. தேவசேனா அவர்களுக்கு “தன்னம்பிக்கை “விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார் .தற்பொழுது பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு மனித நேய மக்கள் அறக்கட்டளை மற்றும் பசுமை வாசல் பவுண்டேசன் இணைந்து நடத்திய பல்துறை சாதனையாளர்களை கெளரவிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட இணையவழி விருது நிகழ்ச்சியில் இளம் படைப்பாளர்கள் பிரிவில் செ. தேவசேனா அவர்களுக்கு “காமராசரின் சிகரம் விருது “வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.