மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்டது. இன்னிலையில் பாதிப்படைந்த கட்டிடத்தில் இருந்து பெரம்பூர் கடைவீதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் தற்காலிகமாக பெரம்பூர் காவல் நிலையம் செயல்பட்டு கொண்டு இருந்தது .
அதன் படி புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் பெரம்பூர் காவல் நிலைய போலீசார் ஒன்றிணைந்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக காவலர் குடியிருப்பில் செயல்பட்ட பெரம்பூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுகுணா சிங் பெரம்பூர் காவல் நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறியிருந்தார்.
ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த இரண்டு அடுக்கு கட்டிடம் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரக்கூடும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.