0 0
Read Time:3 Minute, 19 Second

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அதனை மறுக்கும் பட்சத்தில் 1983-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்டுத்துவதாக அறிவித்திருந்தார். அதன் பேரில் மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், பழையாறு முதல் தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்திலையில் 9 -வது நாளாக தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள படகுகள், வலைகள், இஞ்சின்கள் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள முயன்றனர். தகவல் அறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள் அதிகாரிகளை சிறைபிடித்து ஆய்வு பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் தங்கள் அனுமதியின்றி தங்களது படகு மற்றும் வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 50 -க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கபட்டனர். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கபட்டுள்ளதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அதுவரை மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது எனக் கூறி உடனே இங்கிருந்து அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தினர்.

ஆனால் அதிகாரிகளோ வேறு கிராமத்திலும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் வேறு வழியின்றி புதுப்பேட்டை கிராமத்திலேயே முகாமிட்டுள்ளனர். இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %