0 0
Read Time:1 Minute, 21 Second

குத்தாலம் அருகே குளத்தில் பச்சிளம் குழந்தையின் உடலை வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை பிணமாக  மிதப்பதை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விைரந்து வந்த போலீசார் குளத்தில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பிறந்த குழந்தையை குளத்தில் வீசி சென்றவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %