மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பினர் சார்பில் ஸ்டெச்சர் மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஜனபுனிதம் நிறுவனர் ஜன புனிதர்,மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆகியோர் மாவட்ட சுகாதார மருத்துவத் துறை இணை இயக்குனர் பிரகாஷ், துணை இயக்குனர் மகேந்திரன்,. அரசு மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள, நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படக்கூடிய ஸ்டெச்சர் எனப்படும் தள்ளும்படுக்கை மற்றும் ஸ்டூல் இருக்கைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சீனிவாசமூர்த்தி தேவகி தம்பதியினர், புனிதம் அமைப்பின் மகேஸ்வரி, தினேஷ், ராஜேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த மீனாட்சி சுந்தரம், சுதர்சனம், பழனிவேல், கிங் பைசல், மதிச்செல்வன்,வேந்தன், விஜய், குருமூர்த்தி மற்றும் குழுவினர்கள் பங்கேற்றார்கள்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.