0 0
Read Time:1 Minute, 33 Second

மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்து, மக்களுக்கான சேவைத் தரத்தை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். அரசு அலுவலர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு, அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %